உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி கோயில் திருவிழா ஆலோசனைக்கூட்டம்

வீரபாண்டி கோயில் திருவிழா ஆலோசனைக்கூட்டம்

தேனி : தேனி கலெக்டர் அலுவலகத்தில், வீரபாண்டி கோயில் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. தேனி அருகே உள்ள வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாயை முன்னிட்டு, ஏப்.,16 ல் முக்கொம்பு கொடிமரம் நடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. அதை தொடர்ந்து, மே 6 முதல் 13 ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. இதையொட்டி, தேனி கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் பழனிசாமி தலைமையில், விழா ஏற்பாடு குறித்த முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. இதில், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. எஸ்.பி.மகேஷ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் காஞ்சனா, நிர்வாக அதிகாரி சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !