உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

திருக்கடையூர் :   நாகை மாவட்டம், பொறை யாறு அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்த மான அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது.   இக் கோவிலில் சித்திரை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு   கோவில் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கொடி மரத்திற்கு, சந்தனம், தேன், பால், கற்கண்டு உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியம் கொண்டு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப் பட்டது.  பின்னர் பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடியேற்றப்பட்டு  பூதவாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா   நடை பெற்றது.  .   இன்று (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திருமுறை விழாவும், யானை வாகன காட்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !