உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா

அரியலூர் வைத்தியநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாண விழா

அரியலூர் :  அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள திருமழபாடியில் சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோவில் உள்ளது.   இக்கோவிலில்  திருநந்தியெம்பெருமானுக்கும், சுயஸாம்பிகை தேவியருக்கும் திருக்கல்யாண விழா கோவிலில் அமைந்துள்ள திருமண மேடையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.  
தொடர்ந்து மணமக்களுக்கு மஞ்சள், சந்தனம், மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பழச்சாறு, இளநீர், விபூதி, தயிர், பால் போன்றவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் ர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !