உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் ராமநவமி விழா!

செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் ராமநவமி விழா!

செஞ்சி: செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் ராம நவமியை முன்னிட்டு வெங்கட்ரமணனுருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்தனர். செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. பகல் 11.30 மணிக்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பூதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு அலங்காரம் வெங்கட்ரமணருக்கு சந்தன காப்பு அலங்காரமும் செய்தனர். பகல் 3 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. பேரூராட்சி முன்னாள் துணை தலைவர்  அரங்க ஏழுமலை, உபயதாரர் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் முருகன், வழக்கறிஞர்கள் வைகை தமிழ், சக்திராஜன், தினகரன், பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன், தெய்வீக மக்கள் இயக்க தலைவர் ராஜா தேசிங்கு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !