ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கருட சேவை!
ADDED :4234 days ago
ஸ்ரீரங்கம்: ரெங்கநாதர் கோவிலில் நடந்து வரும் பங்குனித்தேர் திருவிழாவின் நான்காம் நாளான நேற்று மாலை கருட சேவை சிறப்பாக நடைபெற்றது. விழாவில் உற்சவர் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.