பரமக்குடியில் சீதா-ராமர் திருக்கல்யாணம்!
ADDED :4234 days ago
பரமக்குடி : பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் ராமநவமி விழாவையொட்டி, ராமர் - சீதா திருக்கல்யாணம் நடந்தது. ராமநவமி விழா, மார்ச் 31 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து வாமன அவதாரம், காளிங்க நர்த்தனம், பாண்டுரெங்கன், கூடலழகர், கள்ளழகர் அலங்காரத்தில் ராமர் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார். நேற்று காலை 10.51 மணிக்கு சங்கரமடத்தில் இருந்து மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், 11.45 மணிக்கு ஸ்ரீராமருக்கும் - சீதாபிராட்டிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் அன்னதானம், மாலையில் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து, சுவாமி அருள்பாலித்தார். இன்று காலை தீர்த்தவாரி, இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. நாளை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை வீதியுலா நடைபெறுகிறது.