காரைக்காலில் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4234 days ago
காரைக்கால்: காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்ட ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் திரண்டனர். காரைக்கால் காமராஜர் சாலையில் ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோவில் புதிதாக கட்டப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, கடந்த 7ம் தேதி பூஜைகள் துவங்கியது. அன்று காலை 9:00 மணிக்கு லட்சுமி நரசிம்ம சுதர்சன ஹோமும், மாலை 5:00 மணிக்கு கும்ப பூஜை, பஞ்சூக்த ஹோமம் நடந்தது. 8ம் தேதி காலை 8:00 மணிக்கு, பஞ்சசூக்த ஹோமம், மூலமந்தர ஹோமம் நடந்தது. கும்பாபிஷேக தினமான நேற்று காலை 6:30 மணிக்கு பிரதான ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது. 10:00 மணிக்கு கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.