உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்!

நல்லாத்தூர் புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்!

கச்சிராயபாளையம்: நல்லாத்தூர் கிராமத்தில் உள்ள புதுப்பட்டு மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த தேர் திருவிழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கச்சிராயபாளையம் அடுத்த நல்லாத்தூர் கிராமத்தில் புதுப்பட்டு மாரியம்மன் திரு விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 மணிக்கு அமைச்சர் மோகன், எம்.எல்.ஏ., அழகுவேல்பாபு, சேர்மன் ராஜேந்திரன், சிறப்பு அலுவலர் தமிழரசி, ஊராட்சி தலைவர் குமுதம்சேகர் தேரினை வடம் பிடித்து துவக்கி வைத்தனர். டி.எஸ்.பி, மதிவாணன் மேற்பார்வையில், கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ராஜக்கண்ணன் தலைமையில் , 5 இன்ஸ்பெக்டர்கள், 6 சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட 80 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !