புற்று மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா!
ADDED :4236 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சக்தி புற்றுமாரியம்மன் கோவிலில் விநாயகர், பாலமுருகன், நவநாயகர் சுவாமிகளுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது. முதற்கால பூஜைக்குப்பின் சுவாமிகளுக்கு எண் வகை மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை 7 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் வழிபாடு, புன்னியாவதனம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகனம், அங்குரார்பனம், யாக வேள்வி, திரவிய ஹோமம், பூர்ணாஹூதி, மகா தீபாராதனைக்குப் பின் 9:45 மணிக்கு கலசங்கள் புறப்பாடு நடந்தது தொடர்ந்து 10:00 மணிக்கு விநாயகர், முருகன், நவநாயகர்களுக்கு புனித நீரூற்றி மகாகும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நல சங்கத்தினர் செய்தனர்.