உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த பாரமடையூரில் அமைந்துள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது. இக்கோவிலில் நேற்றுமுன்தினம் காலை 5:00 மணி முதல் விக்னேஷ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து பூஜை உள்ளிட்ட முதல்கால யாக பூஜைகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை 6:30 மணி முதல் இரண்டாம் கால யாக பூஜையும், 9:15 மணிக்கு விமான கும்பாபிேஷகம், 9:30 மணிக்கு விநாயகர், பாலமுருகன் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் சன்னதிகளில் கும்பாபிேஷகமும் நடந்தது. காலை 10:00 மணிக்கு மகா அபிேஷகம், மகா தீபாராதனையை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !