கொத்தப்புள்ளியில் ராம நவமி விழா
ADDED :4339 days ago
ரெட்டியார்சத்திரம் : கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயிலில், ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கமலவள்ளி சமேத பெருமாளுக்கு, பால் அபிஷேகம் நடைபெற்றது. ஏகாந்த சேவை அலங்காரத்துடன், சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், பைரவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு, விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
* கன்னிவாடி நரசிங்கப்பெருமாள் கோயிலில், ராமநவமி அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
* திண்டுக்கல் ரெங்க நாதபுரம் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் ராமநவமி விழா நடந்தது.