உதயமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போடி : போடி பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள சந்தைப்பேட்டை உதயமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், தன பூஜை, வாஸ்து சாந்தி, தீபாராதனை, நவக்கிரக நட்சத்திர, அஸ்த்திர ஹோமங்கள், யாக பூஜைகளும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு மேல் ஸ்ரீவிக்னேஸ்வர பூஜை, ஹோமம், தீபராதனை, யாத்திர தானம், சிறப்பு யாக பூஜையும் நடத்தி, தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. காலை 10 மணிக்கு, பால விநாயகர், உதயமாரியம்மன், பாலமுருகன் ஆகிய சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் சம்பத், துணைத்தலைவர்கள் சக்திவேல், ஜெயராமன், செயலாளர் மோகன்சிங், பொருளாளர்கள் காளிமுத்து, ஜெயபால் மற்றும் கோயில், திருப்பணிக் கமிட்டி நிர்வாகஸ்தர்கள் செய்திருந்தனர். விழாவில் பழனிமுருகன் ஏஜென்சீஸ் உரிமையாளர்கள் பழனிமுருகன், ஜெயராம், ஓம் அருள் சக்தி திருமண தகவல் மைய உரிமையாளர் பவுன்தாஸ், சந்தியாஸ் மஹால் உரிமையாளர்கள் சம்பத்சந்தியா, பாலாஜிசரண்யா, முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் சங்கர், போடி ஏலக்காய் லயன்ஸ் சங்க பொருளார் ராஜேந்திரபிரபு, ஏலக்காய் வியாபாரம் ஜீவானந்தம், ரெங்கா புளு மெட்டல் உரிமையாளர் ஜெயராம் உட்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனின் அருளாசி பெற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.