கணபதி கோவிலில் ராமநவமி விழா
ADDED :4238 days ago
நாகர்கோவில் : நாகர்கோவில் அனந்தசமுத்திரம் தெற்குரதவீதியில் உள்ள கணபதி கோவிலில் ராமநவமி விழா தொடங்கியது. இதையொட்டி கணபதி சன்னதியில் விசேஷ அபிஷேகம், அடுக்கு தீபங்கள் ஏற்றுதல் ஆகியவை நடந்தது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் விழாவில் மாலையில் ஆன்மீக உரை சொல்லரங்கம், சமயசொற்பொழிவு, பஜனை, உபன்யாசம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 17-ம் தேதி ராமபிரான் உற்சவமூர்த்தியை அலங்கார சப்பரத்தில் எழுந்தருள செய்து வீதிவலம் வரும் நிகழ்ச்சியும், 18-ம் தேதி இரவில் ஆஞ்சநேயரை அலங்கார சப்பரத்தில் எழுந்தருள செய்து வீதிவலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகின்றனர்.