துறையூரில் இன்று ராமாயணம் சிறப்பு சொற்பொழிவு
ADDED :4238 days ago
துறையூர்: துறையூரில் ஸ்ரீமத் ராமாயணம் சிறப்பு சொற்பொழிவு இன்று துவங்கி 12ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடக்கிறது. இந்நிகழ்ச்சி துறையூர் ருக்குமணி, சத்தியபாமா சமேத வேணுகோபால ஸ்வாமி கோவிலில் நடக்கிறது. "சுந்தரகாண்டம் என்ற தலைப்பில் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துகிறார். மூன்று நாட்களும் மாலை 6.30 மணி முதல் 6.30 வரை நாம ஜபம் செய்யப்படும். நிகழ்ச்சியை ஓய்வு தமிழாசிரியர் சந்திரசேகரன், தவநெறி மன்ற செயலர் சுப்ரமணியன், சீனிவாசன் மற்றும் மார்கழி மாத பாராயணகுழுவினர் ஒருங்கிணைத்துள்ளனர். ஆன்மிக பெருமக்களும், இலக்கிய ஆர்வலர்களும் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொண்டனர்.