உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உல்லாடாவில் மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா

உல்லாடாவில் மாரியம்மன் கோவிலில் பூ குண்டம் திருவிழா

குன்னூர் : கேத்தி அருகே உல்லாடாவில் உள்ள மாரியம்மன் கோவிலில் 117வது ஆண்டு பூகுண்டம் உற்சவ விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.கேத்தி அருகே உல்லாடா கிராமத்தில் நடந்த பூ குண்ட விழாவில், 21 நாட்கள் விரதம் மேற்கொண்ட 9 பக்தர்கள் மதியம் 1:50 மணிக்கு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினர். நீலகிரி மாவட்டத்தில் இருந்து 14 சீமைகளை சேர்ந்த 8000 மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பூசாரி சின்ராஜ், உல்லாடா ஊர் தலைவர் திப்பாகவுடர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !