உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கழுக்குன்றம் முன்குடுமீஸ்வரர் தேர் திருவிழா!

திருக்கழுக்குன்றம் முன்குடுமீஸ்வரர் தேர் திருவிழா!

திருக்கழுக்குன்றம் : பொன்விளைந்தகளத்துார் முன் குடுமீஸ்வரர் கோவிலில், தேர்த் திருவிழா நேற்று கோலாகலமாக நடந்தது. பொன்விளைந்தகளத்துாரில், தொல்லியியல் துறை, இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பிரசித்தி பெற்ற முன்குடுமீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இங்கு கடந்த 4ம் தேதி, பிரம்மோற்சவம் துவங்கியது. நேற்று காலை, 7:30 மணிக்கு, தேர், நிலையில் இருந்து புறப்பட்டது. முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தேரில், அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்பாள் உடனுறை, முன்குடுமீஸ்வாரர் சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். கிராம மக்கள், சுற்று வட்டார மக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர். நாளை மறுநாள், 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 8:00 மணிக்கு, தீர்த்தவாரியும், மாலை 3:30 மணிக்கு, பங்குனி உத்திர, சுவாமி திருக்கல்யாணமும், நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !