உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா!

மதுரை மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா!

புதுார் : மதுரை ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்., 4ல் துவங்கியது. தினமும் காலை, மாலையில் பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இன்றிரவு 9 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடு நடக்கிறது. கோரிப்பாளையம், நத்தம் ரோடு வழியாக வீதி உலா வந்து ஏப்., 12ல் அதிகாலை 4.30 மணிக்கு கோயிலை வந்தடைகிறது. தொடர்ந்து பொங்கல் வைத்தல், மாவிளக்கு, அங்கப்பிரதட்சணம், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாலையில் சர்வ அலங்காரத்தில் புறப்படும் அம்மன், ஆயுதப்படை குடியிருப்பு, ஆத்திக்குளம், வண்டிப்பாதை ரோடு, டி.ஆர்.ஓ., காலனியில் வீதி உலா வருகிறார். ஏப்., 14ல் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !