அண்ணன்மார் கோவிலில் ஏப். 13ல் கும்பாபிேஷகம்!
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தேவம்பாடிவலசு அண்ணன்மார் கோவிலில் வரும் 13ம் தேதி கும்பாபிேஷக நடக்கிறது. அதையொட்டி இன்று (11ம் தேதி) காலை 9:00 மணிக்கு மகா கணபதி ேஹாமம், மகா லஷ்மி ேஹாமம் ஆகியவை நடைபெறும். தொடர்ந்து நாளை மாை 3:00 மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த கலசங்களுடன் சுவாமி ஊர்வலம் புறப்பட்டு, 6:00 மணிக்கு அண்ணன்மார் கோவிலை வந்தடையும். பிறகு விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, சங்கல்பம், புண்ணியாகவசனம், கும்பஸ்தாபனம் உள்ளிட்ட பூஜைகளும் முதல்கால யாகபூஜையும் நடைபெறும். அடுத்து இரவு 9:00 மணியளிவில் மகா தீபாராதனை, 10:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடைபெறும். அடுத்த நாளான 13ம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கி, விக்னேஷ்வர பூஜை, புண்யாக வசனம், பிம்ப சுக்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தனம், கடம் புறப்பாடு ஆகியவை நடக்கும். தொடர்ந்து 9:30 மணிக்கு கலச தீர்த்தம் விடப்படும்; 10:00 மணிக்கு மேல் விமான மகா கும்பாபிேஷகம், மூலவர் மகா கும்பாபிேஷகம், தீபாராதனை, மகா அபிேஷகம், கோமாதா பூஜை, தச தரிசனம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெறும். தொடர்ந்து 10:30 மணி முதல் அன்னதானம் வழங்கப்படும்.