உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 16ல் பூ மிதி திருவிழா!

பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 16ல் பூ மிதி திருவிழா!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி போடிபாளையம் குளத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில், பூமிதி திருவிழா வரும் 16ம் தேதி நடக்கிறது. பொள்ளாச்சி ஜமீன்ஊத்துக்குளி போடிபாளையம் குளத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் பூமிதி திருவிழா கடந்த மாதம் 31ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. சக்தி கும்பம் முத்தரித்து, விசேஷ பூஜைகள், பூவோடு எடுத்தல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகிறது. தொடர்ந்து, இன்று முக்கிய ஸ்தலங்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வருதல், 14ம் தேதி தீர்த்தம் கொண்டு வந்து பூஜை செய்தல் மற்றும் இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும்; 15ம் தேதி காலை 10:00 மணிக்கு அம்மன் சப்பரம் ஊர்வலமும், மாலை 5:00 மணிக்கு தர்மராஜா கோவிலில், பச்சை போடுதல்; மாலை 6:00 மணிக்கு பூ குண்டம் திறப்பு விழா, இரவு 9:00 மணிக்கு சிங்க வாகனத்தில் அம்மன் ஊர்வலம், பூ குண்டம் வளர்த்தல், வாண வேடிக்கையும், இரவு 11:00 மணிக்கு கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து, 16ம் தேதி அதிகாலை அக்னி கும்பம் முத்தரித்து வந்து காலை 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல், காலை 9:00 மணிக்கு அன்னதானம், மாலை 4:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும்; 18ம் தேதி மகா அபிேஷக ஆராதனை, மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !