பேரூர் கோவிலில் காணிக்கை எண்ணிக்கை!
பேரூர் : பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டதில், 10 லட்சத்து ஏழாயிரத்து 454 ரூபாய் வசூலாகியிருந்தது. கடந்த பிப்., 20ம் தேதிக்கு பிறகு, பேரூர் பட்டீஸ்வர கோவில் உண்டியல் நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதில், கொடிமரம், நந்தி, வெள்ளகோபுரம், சுவாமி சன்னதி, திருப்பணி உண்டியல் உள்பட மொத்தம் 12 உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்களின் ணிக்கை எண்ணப்பட்டது. இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், பேரூர் தமிழ் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் காணிக்கை யை எண்ணினர். முக்கிய உண்டியலில், 7 லட்சத்து 23 ஆயிரத்து 385 ரூபாயும், திருப்பணி உண்டியலில் 2 லட்சத்து 67 ஆயிரத்து 651 ரூபாயும், யானை பராமரிப்பு உண்டியலில், 16 ஆயிரத்து 418 ரூபாயும் இருந்தது. மொத்தம் 10 லட்சத்து ஏழாயிரத்து 454 ரூபாய் வசூலாகியிருந்தது. இதில், பக்தர்கள் நேர்த்திக்கடனாக 35 கிராம் தங்கமும், 199 கிராம் வெள்ளியும் செலுத்தியிருந்தனர்.