உலக அமைதி வேண்டி.. பங்குனி உத்திர நாமசங்கீர்த்தன விழா!
ADDED :4237 days ago
பேரூர்: பங்குனி உத்திர நாமசங்கீர்த்தன விழா, பேரூரில் 13ம் தேதி நடக்கிறது. உலக மக்கள் அனைவருக்கும் நன்மை, அமைதி வேண்டி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு நாமசங்கீர்த்தன விழா, பேரூர் வைதீகாள் மடத்தில் நடக்கிறது. விழா, 13ம் தேதி காலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 8.00 மணிக்கு, சாஸ்தா அபிஷேகம், சாஸ்தா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் கந்தர்வ ராஜஹோமம் ஆகியன நடக்கிறது. இதையடுத்து, இரவு 9.00 முதல் 12.00 மணி வரை ஸ்ரீமஞ்சப்பரா மோகன் குழுவினரின், சிறப்பு நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடக்கிறது. இறுதியாக, இரவு 12.00 மணிக்கு, சித்திரை கணி காணுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகித்தலுடன் விழா முடிகிறது.