முத்துமாரியம்மன் கோவிலில்13ம் தேதி அக்னி கரக உற்சவம்
உளுந்தூர்பேட்டை: மல்லிகா கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வரும் 13ம் தேதி அக்னி கரக உற்சவம் நடக்கிறது. உளுந்தூர்பேட்டை தாலுகா மல்லிகா கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் வரும்13ம் தேதி அக்னி கரக உற்சவம் நடக்கிறது. அதனையொட்டி நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு காப்பு கட்டுதலும், இன்று(11ம் தேதி) காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தல் விழா நடக்கிறது. 12ம் தேதி 10 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 13ம் தேதி காலை 7 மணிக்கு செடல் மரம் நிலை நிறுத்தலும், மதியம் 1 மணிக்கு காவடி பூஜையும், மதியம் 2 மணிக்கு காத்தவராயன் வீதியுலா நடக்கிறது. மதியம் 3 மணிக்கு அக்னி கரக உற்சவம் நடக்கிறது. இந்த அக்னி கரக உற்சவத்தின் போது குழந்தை பாக்கியம் கேட்டு வேண்டுபவர்களுக்கு நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இரவு 7 மணிக்கு ஆட்டு செடல் நடக்கிறது.