உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு!

அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு!

காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் மலைக்கோவிலில், சனி மஹா பிரதோஷ வழிபாடு, நாளை நடக்கிறது. இதையொட்டி, இன்று மாலை, 4.30க்கு கணபதி ஹோமமும், 5 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பலர் செய்து வருகின்றனர். * தர்மபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் நகர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு, இன்று மாலை, 4.30 மணிக்கு, நந்திக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. * காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் கோவில், சனி மஹா பிரதோஷ வழிபாடு இன்று நடக்கிறது. மாலை, 4 மணிக்கு, கணபதி ஹோமமும், 4.30 மணிக்கு நந்திக்கு, சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, குருக்கள் மோகன்குமார் மற்றும் பலர் செய்து வருகின்றனர். * பாலக்கோடு பால்வண்ணநாதர், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், அடிலம் அடிலநாதர் கோவில், அரூர் தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை, 4.30 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !