நீலகிரி, அன்னமலை முருகன் கோவிலில் 13--ம் தேதி காவடி திருவிழா
ADDED :4235 days ago
மஞ்சூர் : நீலகிரி மாவட்டம் மஞ்சூர், அன்னமலை தண்டாயுத பாணி முருகன் கோவில் கிருத்திகை தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலின் 37-ம் ஆண்டு நிறைவு விழா, பஞ்சலோக உற்சவ மூர்த்தி பவனி விழா, கும்பாபிஷேக விழா, காவடி பெருவிழா மற்றும் தேர் திருவிழா ஆகி யவை வரும் 13 மற்றும் 14--ம் தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.