தூத்துக்குடி பேய்க்குளம் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை
ADDED :4235 days ago
சாத்தான்குளம் : தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் சங்கரநயினார்புரம் ஸ்ரீசங்கரலிங்கசுவாமி கோயிலில் புதிதாக கொடிமரம் அமைக்கப்பட்டது. இக்கோயிலில் புதிய கொடிமரம் மார்ச் மாதம் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து கொடிமரம் நடப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. விழாவையொட்டி கோயிலில் பல்வேறு பூஜைகள் கொடி மரத்துக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது.