உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கோவிலில் தீமிதி விழா

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் கோவிலில் தீமிதி விழா


விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் தீமிதித்தனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக தீமிதி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு உற்சவம் கடந்த 2ம் தேதி துவங்கியது. மாலையிடுதல், திருமண விழா நடத்தப்பட்டு நாள்தோறும் அம்மனுக்குசிறப்பு அலங்காரம் செய்து வைத்து வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 5.30 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. சக்தி கரகம் மற்றும் திரவுபதி அம்மன் தீ மிதித்த பின்னர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் தீமிதித்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !