உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.20 லட்சம் உண்டியல் வசூல்

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.20 லட்சம் உண்டியல் வசூல்

காரைக்குடி : இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில், மாசி  பங்குனி விழா, கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.உள்ளூர் மட்டும்,வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி,அம்மனை வழிபட்டு சென்றனர். விழாவையொட்டி, கோயில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன்தினம், உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் முருகானந்தம், செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கணக்கர் அழகு பாண்டி தலைமையில் நடந்தது. இதன் பணியில், மகளிர் சேவா குழுவினர், பெண்கள் பங்கேற்றனர். உண்டியலில், 20 லட்சத்து 81 ஆயிரத்து 37 ரூபாய், 68 கிராம் 600 மி.லி., தங்கம், 1 கிலோ 25 கிராம் வெள்ளி பொருட்கள், 21 வெளிநாட்டு கரன்சிகள் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !