சிதம்பரம், செல்லியம்மன் கோவிலில் நாளை பங்குனி உத்திர விழா
ADDED :4230 days ago
சிதம்பரம்,: சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மன் கோவிலில் 13ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை நடக்கிறது. சிதம்பரம் மந்தக்கரை செல்லியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு 13ம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நாளை (13ம் தேதி) நடக்கிறது. விழாவையொட்டி மதியம் 12:00 மணிக்கு முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.விழா ஏற்பாடுகளை விழாக்குழவினர் செய்கின்றனர்.