உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டபாணிபுரத்தில் சுப்ரமணியர் தேர் திருவிழா

கோதண்டபாணிபுரத்தில் சுப்ரமணியர் தேர் திருவிழா

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர், கோதண்டபாணிபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோவிலில் 11ம் ஆண்டு தேர், திருவிழா நடந்தது.அரகண்டநல்லூர், கோதண்டபாணிபுரத்தில் அமைந்துள்ள சுப்ரமணியர் கோவிலில் 11ம் ஆண்டு பங்குனி உத்திர விழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தியும் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.மதியம் 1.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் எழுந்தருளி னார். பக்தர்கள் தேரை வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.கோவில் அர்ச்சகர் மணிகண்டன் பூஜைகள் செய்தார்.ஏற்பாடுகளை கோதண்டாபணிபுரம் பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !