உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினர். பின் தீர்த்த வாரி உற்சவம் நடைபெற்றது. சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

கீழக்கரை : தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில், ஐயப்பன் கனி அலங்காரத்தில் அருள் பாலித்தார். முன்னதாக காலையில் கணபதி ஹோமம் தலைமை குருக்கள் மோகன் தலைமையில் நடந்தது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் சுவாமி கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !