உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி மடத்தில் பஞ்சாங்க படலம்

சிருங்கேரி மடத்தில் பஞ்சாங்க படலம்

புதுச்சேரி: எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடத்தில் பஞ்சாங்க படலம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சாரதாம்பாள் மடத்தில் பஞ்சாங்க படலம் நடந்து வருகிறது. நேற்று தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, 37ம் ஆண்டு பஞ்சாங்க படலம் நடந்தது. கீதாராம சாஸ்திரி பங்கேற்று, நட்சத்திரம், ராசி பலன்கள் குறித்து விளக்கினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிருங்கேரி சிவகங்கா மடம் செயலர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சந்திரமோகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !