முருங்கப்பாக்கம் கோவிலில் காவடி அபிஷேக ஆராதனை
ADDED :4235 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் முத்துக்குமார சுவாமி கோவிலில், இன்று (14ம் தேதி) 108 சங்காபிஷேகம் நடக்கிறது. முருங்கப்பாக்கம் முத்துக்குமார சுவாமி கோவில் 42ம் ஆண்டு, காவடி அபிஷேக ஆராதனை விழா, கடந்த 12ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு செடல், மிளகாய் சாந்து அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் காவடி எடுத்தும், செடல் அணிந்தும் சுவாமிக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடி வீதியுலாவுடன், சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (14ம் தேதி) காலை 108 சங்கு அபிஷேகம் நடக்கிறது. நாளை (15ம் தேதி) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு, இடும்பன் பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து 20ம் தேதி சாந்தி பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.