உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிரி கோயிலில் சிறப்பு பூஜை

ராமகிரி கோயிலில் சிறப்பு பூஜை

குஜிலியம்பாறை : ராமகிரி கல்யாண நரசிங்கபெருமாள் திருக்கோவில், 900 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இக்கோயில் கட்டடங்கள், சிதிலமடைந்து இருந்ததால், திருப்பணிக்குழு அமைத்து, உள்ளூர் பெரியவர்கள் மூலம் கட்டட பணிகள் நடந்து வருகிறது. கட்டட பணி துவங்கி நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணி நிறைவு பெறாமல் உள்ளது. இந்நிலையில், கட்டட பணிகள் முடிந்து, விரைவில் மஹா கும்பாபிஷேக பணிகள் நடைபெறும் நோக்கில், சித்திரை முதல் நாளை முன்னிட்டு, பகவத் பிரார்த்தனை, மஹா பூர்ணாகுதி, தீர்த்த, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. திருப்பணிக்குழு தலைவர் கருப்பணன், செயலாளர் வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கோயில் கட்டட பணி செலவுகளுக்காக பக்தர்கள் நிதியுதவி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !