வாதானுார் கோவிலில் லட்ச தீப திருவிழா
ADDED :4235 days ago
திருக்கனுார்: வாதானுார் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா நடந்தது.திருக்கனுார் அடுத்த வாதானுார் ஆஞ்சநேயர் கோவிலில், 68ம் ஆண்டு லட்சதீப விழா நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ௧1:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்சதீப விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 9:00 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.