லாஸ்பேட்டை கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :4235 days ago
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணியர் சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு சிவசுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு, பெண் அழைப்பு நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு, வள்ளி தேவசேன சமேத சிவசுப்ரமணியர் சுவாமி திருகல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.