உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை கோவில்களில் சிறப்பு வழிபாடு

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், தமிழ் புத்தாண்டையொட்டி, சிறப்பு வழிபாடுகள் நடந்தன. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி, விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் பூவோடு மற்றும் தீர்த்தம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. களை கட்டிய கிராமங்கள்: உடுமலை சுற்றுப்பகுதி கிராமங்களிலுள்ள கோவில்களில், பக்தர்கள் பல்வேறு புண்ணிய தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர். திருமூர்த்திமலை, கொடுமுடி, தெய்வகுளம் காளியம்மன் கோவில் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, ஊர்வலமாக மேளதாளத்துடன், கோவில்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. இதனால், கிராமங்களில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. மக்கள் வீடுகளில், பல்வேறு கனிகளை வைத்து பூஜை நடத்தி தமிழ் புத்தாண்டை வரவேற்றனர். சுற்றுலா தலங்களிலும் மக்கள் கூட்டம் அதிகளவு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !