அன்னமலை முருகன் கோவில் விழா
மஞ்சூர் : அன்னமலை முருகன் கோவிலில் நேற்று வெள்ளி விழா காவடி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.அன்னமலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் 37ம் ஆண்டு நிறைவு விழா, மகா கும்பாபிஷேகம், 25ம் ஆண்டு வெள்ளி விழா காவடி பெருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு மகா யாகம், மகா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு கோவில் வளாகத்திலிருந்து பக்தர்கள் புடை சூழ பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடிகளை ஏந்தி கீழ்குந்தா, மஞ்சூர் பஜார், குந்தா மேல்கேம்ப், மட்டக்கண்டி வழியாக பக்தகர்கள் ஊர்வலம் மதியம் 2.30 மணிக்கு கோவில் வளாகத்தை வந்தடைந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருக பெருமானை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதில், சாந்தலிங்க ராமசாமி அடிகளார், மருதாசல அடிகளார், சாக்தி ஸ்ரீ ஞான குரு சிவலிங்கேஸ்வர சுவாமி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்திருந்தார்.