உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேரோட்டம்

லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேரோட்டம்

நங்கவள்ளி: நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம ஸ்வாமி பங்குனி தேரோட்டம், நேற்று மாலை துவங்கியது. ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து, தேரை இழுத்தனர். நங்கவள்ளியில், பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்ம ஸ்வாமி, சோமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர தினத்தில், உற்சவர் ரதம் ஏறும் நிகழ்ச்சியும், பங்குனி உத்திரத்துக்கு அடுத்த நாள், தேரோட்டம் நடப்பது வழக்கம். ஸ்ரீ தேவி பூதேவியுடன் பெருமாள் ஒரு தேரிலும், சோமேஸ்வரர் சவுந்தரவள்ளி ஒரு தேரிலுமாய் அமர்ந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி, வேரெங்கும் காண்பது அரிது. அதனால், நங்கவள்ளியில் நடக்கும் தேரோட்டத்தின்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்வர். அதன்படி, லட்சுமி நரசிம்ம ஸ்வாமி, சோமேஸ்வரர் தேரோட்டம், நேற்று மாலை, 5 மணிக்கு நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து, தேரை இழுத்துச் சென்றனர். விழாவில், ஏராளமானோர் கலந்துகொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !