வேலூர் நாகநாத சுவாமி கோவிலில் 108 சங்காபிஷேகம்
ADDED :4235 days ago
ஆம்பூர், : வேலூர் மாவட்டம், ஆம்பூர் நாகநாத சுவாமி திருக்கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு, உலக நன்மை மற்றும் மழை வேண்டி 108 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது விழாவில் 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, தொடர்ந்து சங்காபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் லட்ச தீப விழா, ரிஷப வாகனத்தில் சுவாமி கோவில் பிரகார உலா நடைபெற்றது.