உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம்!

ஈரோடு சென்னிமலை முருகன் கோவில் தேரோட்டம்!

சென்னிமலை ஈரோடு மாவட்டம்,  சென்னிமலையில் உள்ள   முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 11–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து  திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. அதிகாலை 5 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.  காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !