வடபழனி ஆண்டவர் கோவிலில்.. வறண்ட குளத்தில் தெப்ப திருவிழா!
ADDED :4234 days ago
சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், தெப்ப திருவிழா நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சிக்காக, தண்ணீர் இன்றி வறண்டு போன குளத்தில் அமைந்துள்ள நடுமண்டபத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தெப்ப உற்சவம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் குளத்தில் இறங்கி, தெப்பம் சுற்றுவது போல், தெப்பமாக அலங்கரிக்கப்பட்ட நடுமண்டபத்தை சுற்றி வந்து, சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.