திருக்கோவிலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு!
ADDED :4232 days ago
திருக்கோவிலூர்: தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு திருக்கோவிலூர் சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் விழா ஏற்பாடுகளை செய்தனர். கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு மூலவர்க்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங் காரத்தில் சோட சோபவுபச்சார தீபாராதனை நடந்தது. அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மாலை 6 மணிக்கு அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.