மழை பொழிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!
உடுமலை : உடுமலை சைவத்தமிழ் சங்கத்தின் சார்பில், வறட்சி நீங்கி, மழை பொழிய திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி பல்வேறு கோவில்களில் நடந்தது. நிகழ்ச்சி, தாராபுரம் ரோடு சங்கரேசுவரர் கோவில், சிவசக்தி காலனி சித்தி விநாயகர் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், மானுப்பட்டி வனதுர்க்கை ஆசிரமம், சத்திரம்புத்துார் உச்சிகாளியம்மன் கோவில், கொழுமம் தாண்டேசுவரர் கோவில், பழநி அடிவாரம் மீனாட்சி சுந்தரேசுவரர், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் நடந்தது. சைவத்தமிழ் சங்க சிவனாடியார்கள் இக்கோவில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று திருவாசகம் முற்றோதல் மற்றும் அமைப்பாளர் குப்புசாமி எழுதிய மழை வேட்டல் விண்ணப்ப கவிதை பாராயணமும் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, கலைச்செல்வி, பாரதி ஆகியோர் கொண்ட குழுவினர், பங்குனி உத்திர பக்தர்களுடன் இணைந்து, கிரிவலப்பாதையில், பதிகங்களை பாராயணம் செய்தனர்.தொடர்ந்து சிறப்பு வழிபாட்டிற்கு உதவி செய்த கோவில் செயல்அலுவலர்கள், நிர்வாகிகள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கு சங்க அமைப்பாளர் நன்றி தெரிவித்தார்.