உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏம்பலம் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா

ஏம்பலம் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா

நெட்டப்பாக்கம்: ஏம்பலம் முத்துமாரியம்மனுக்கு 1008 பால் குட அபிஷேகம் நேற்று நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை பவுர்ணமி விழா நடந்தது. இதனை முன்னிட்டு, 1008 பால் குட அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள பாலமுருகன் கோவில் வளாகத்தில் இருந்து பக்தர்கள் 1008 பால் குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பன்னீர்செல்வம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !