தேவாலயங்களில் குறுத்தோலை தினம்
ADDED :4300 days ago
விழுப்புரம்: குறுத்தோலை தினத்தையொட்டி விழுப்புரத்தில் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு ஊர்வலமாக சென்றனர்.கிறிஸ்தவர்களின் தேவபிதா இயேசு ஏப்., 18ம் தேதி சிலுவையில் அறையப்படுவதை புனித வெள்ளியாகவும், 13ம் தேதி இயேசு வீதிகளில் ஊர்வலமாக சென்றதை குறுத்தோளை தினமாக கிறிஸ்துவ மக்கள் கொண் டாடி வருகின்றனர்.குறுத்தோலை தினத்தையொட்டி விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு (கல்லறைக்கு அருகே) சி. எஸ்.ஐ., தேவலாயம் வரை பங்கு தந்தை அகஸ் டீன் பிரேம்ராஜ் தலைமையில் கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக குறுத்தோலை ஏந்தி சென்றனர். தொடர்ந்து ஆலயத்தில் கூட்டு பிராத்தனை நடந்தது. கிறிஸ்து அரசர் ஆலயம், செயின்ட் சேவியர், புனித ஜென்மார்க்கினி உட்பட பல தேவாலயங்களில் குறுத்தோலை தினம் கொண்டாடப்பட்டது.