உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

பிடாரி செல்லாண்டியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு

மோகனூர்: பிடாரி செல்லாண்டியம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் அடுத்த, ஒருவந்தூரில் பிரசித்தி பெற்ற பிடாரி செல்லாண்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கும் பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிவடைந்தை தொடர்ந்து, கடந்த, ஃபிப்ரவரி, 13ம் தேதி கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, தேர்த்திருவிழா துவங்கியதால், மண்டல பூஜை நடக்கவில்லை. திருவிழா முடிந்த பின், மண்டல பூஜை துவங்கியது. கும்பாபிஷேக மண்டல பூஜையின், 48ம் நாள் நிறைவு விழா, நேற்று முன்தினம் நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை, 7 மணிக்கு யாக பூஜையும், 9 மணிக்கு கலச பூஜையும் நடந்தது. பிடாரி செல்லாண்டியம்மன் ஸ்வாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னாதனம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் தர்மகர்த்தா சுப்ரமணி, ஒருவந்தூர் பஞ்சாயத்து தலைவர் செல்லராஜாமணி, பி.ஏ.சி.பி., தலைவர் பாலசுப்ரமணியன், கோவில் நிர்வாகிகள் நடராஜன், ராஜேந்திரன், விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !