வேம்பழகு மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :4231 days ago
துறையூர்: துறையூர் செங்குந்தர் தெருவில் உள்ள வேம்பழகு மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் அப்பகுதியில் உள்ள சுமங்கலி பெண்கள் பங்கேற்று உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும், குடும்ப நலனுக்காகவும் விளக்கு பூஜை செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்து வழிபட்டனர். துறையூர் ஓங்கார குடிலில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில் சித்ரா பவுர்ணமி விழா அரங்க மகா தேசிக சுவாமிகள் தலைமையில் நடந்தது. ராமலிங்க சுவாமிகளின் ஜோதி தரிசனத்துடன் விழா துவங்கியது. சங்க கொடி ஏற்றுதல், ஞானிகளின் சிறப்பு பூஜை, தீட்சை வழங்குதல், சுவாமிகளின் அருளுரை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.