பூச்சாட்டுதலுடன் சமயபுரம் மாரியம்மன் விழா துவக்கம்!
ADDED :4261 days ago
ஈரோடு: ஈரோடு மரப்பாலம் பகுதியில் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விழா நடைபெறுவது வழக்கம். இம்முறை, 18வது ஆண்டாக திருவிழா நடத்தப்படுகிறது. கடந்த எட்டாம் தேதி, இரவு ஒன்பது மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. வரும் 21ம் தேதி அம்மை அழைத்தல் நடக்கிறது. 22ம் தேதி அன்னதானமும், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி இரவு மறுபூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.