கணபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்!
ADDED :4212 days ago
சூலுார் : சூலுார் அடுத்த சின்னியம்பாளையம் ஸ்ரீ மங்களாம்பிகா சமேத கணபதீஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த சில மாதங்களாக கோபுரங்களுக்கு வர்ணம் தீட்டுதல், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. பணிகள் நிறைவடைந்து புனருத்தாரண கும்பாபிஷேக விழா, கடந்த 14ம்தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நாளை(18ம்தேதி) காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் சித்தி வினாயகர், அய்யப்பன், வேல்முருகன், மங்களாம்பிகை, கணபதீஸ்வரருக்கு கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. தொடர்ந்து அன்னதானம், இரவு 7.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடக்கிறது.