உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்!

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் புஷ்ப யாகம்!

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் புஷ்பயாகம் நடந்தது.ஆண்டாள் கோயிலில் பங்குனி திருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் காலையில் மண்டகப்படிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பாடும், இரவில் வீதியுலாவும் நடந்தது. 13ம் தேதி ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் கடைசி நாளான நேற்று இரவு, வெள்ளிக்கிழமை குறடில் புஷ்பயாகம் நடந்தது. ஆண்டாள், ரெங்க மன்னார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !